×

விவசாய சங்க கூட்டம்

கம்பம், டிச. 10: நீரினைப் பயன்படுத்துவோர் சங்க கூட்டம் கம்பம் கோட்டை மைதானத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைவர் ஓ.ஆர்.நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமாறன், துணைச்செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் கலந்து கொண்டார். கூட்டத்தில் வைகை அணையில் நீர்மட்டம் முழுகொள்ளளவான 71 அடியை நெருங்கியுள்ளது, முல்லைப்பெரியாறு அணையில் 128.30 அடி தண்ணீர் மட்டுமே உள்ளதால், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் முல்லைப்பெரியாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் அலட்சியத்தில் உள்ளதால் இரண்டாம்போக சாகுபடி கேள்வி குறியாக உள்ளது. எனவே, இரண்டாம்போக சாகுபடிக்கு நாற்றுகள் பாவி முழுமையாக விவசாயம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பம் பகுதியில் உள்ள குளங்களின் கரைகள் மற்றும் சின்னவாய்க்காலை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ஜக்கையனிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். கூட்டத்தில் கம்பம் பகுதி விவசாயிகள் எராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Agricultural Society ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...