×

நிரம்பி 36 நாட்களுக்கு பிறகு சண்முகாநதி அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


இந்நிலையில் நேற்று காலை தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் அணையை பாசனத்திற்காக திறந்தார். இதனால் ராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, உள்ளிட்ட ஊர்களில் உள்ள 1,640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன்பெறும். நாள் ஒன்றுக்கு 14.47 கனஅடி வீதம் 50 நாட்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி கலெக்டர் கூறுகையில், `` சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 50 நாட்களுக்கு 14.47 கனஅடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

Tags : Shanmuganathi Dam ,
× RELATED சண்முகாநதி அணையில் இருந்து...