×

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் காத்திருப்போர் அறைகளில் அடிப்படை வசதி தேவை

தேனி, டிச. 10: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவகங்களில் காத்திருப்போர் அறை தயார் நிலையில் இல்லாத நிலையே உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தேனி மாவட்டத்தில் இரு கட்டமாக நடக்கிறது. இதில் ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை ஒன்றியங்களில் டிச. 27ம் தேதியும், பெரியகுளம், போடி சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் டிச.30ம் தேதியும் இருகட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வேட்புனுத்தாக்கல் பணியானது நேற்று தேனி மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 130 ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் நடந்தது. தேர்தல் என்றாலே எப்போதும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பது மரபு. இதில் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வரும் இடத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இருக்க வேண்டும். மேலும், சிசிடிவி கேமிரா வசதி இருக்க வேண்டும்.  ஒரே நேரத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வந்து விட்டால் ஒருவர் வேட்புமனுத்தாக்கல் செய்து விட்டு வரும் வரை மற்றொருவர் காத்திருப்பதற்காக காத்திருப்பு அறை இருக்க வேண்டும்.

ஆனால் தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பாளர்களுக்கான காத்திருப்பு அறை ஏற்படுத்தப்படவில்லை. இதேபோல பல இடங்களில போதிய குடிநீர் வசதியும் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : facilities ,waiting rooms ,
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...