×

மனைவி கோபித்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, டிச.10: திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அழகேசன்(34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா. குழந்தை உள்ளது. அழகேசன் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கோபித்துக்கொண்டு சுதா குழந்தையுடன் மணப்பாறையில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். தனிமையில் இருந்த அழகேசன் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று கணவன் தற்கொலை