தா.பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்

தா.பேட்டை, டிச.10: தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடத்தின் முன்பகுதியில் மேற்கூரையை தாங்கியுள்ள சிமெண்ட் தூண்கள் உடைந்த நிலையில் உள்ளது. சிமெண்ட் தூண்கள் கீழே விழுந்தால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் செயல்படும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் முன்புறம் ஆஸ்பெட்டாஸ் மூலம் தாழ்வாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பெட்டாஸ் தாழ்வாரத்தை தாங்கி நிற்கும் முன்பக்க நான்கு தூண்களில் இரண்டு தூண்கள் குறுக்கே துண்டாக உடைந்த நிலையில் அபாயமான நிலையில் காட்சியளிக்கிறது. அலுவலகத்திற்கு செல்வோர் அல்லது அங்கு யாரேனும் அமர்ந்திருக்கும் போது சிமெண்ட் தூண்கள் சாய்ந்த விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதே வேளை ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் உடைந்து விழுந்தாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சிகளின் தேவைகளையும், வளர்ச்சித் திட்டப் பணிகளையும் கவனிக்கும் ஒன்றிய ஆணையரும், ஒன்றிய பொறியாளர்களும் அலுவலக வளாகத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடத்தின் மீது கவனம் செலுத்தி கட்டிடத்தின் தூண்களை சீரமைத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: