அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ரெஸ்டாரண்ட் திறப்பு பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை திருச்சி ஜிஹெச் தாய்,சேய் பிரிவில் டெல்லி சிறப்பு மருத்துவக்குழு ஆய்வு

திருச்சி, டிச.10: திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை தாய்,சேய் பிரிவில் டெல்லி சிறப்பு மருத்துவக்குழு நேற்று ஆய்வு நடத்தினர். திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மருத்துவமனை வளாகத்தில் தாய் சேய் தீவிர சிசு வார்டு மற்றும் பிரசவ வார்டு உள்ளது. இங்கும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

Advertising
Advertising

இந்த நிலையில் மத்திய அரசின் தாய், சேய் சிறப்பு திட்டத்தின்கீழ் டெல்லி மருத்துவமனை டாக்டர் யஷ்வந்த்வர்மா தலைமையிலான குழுவினர் நேற்று தாய், சேய் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். இதில் கர்ப்பிணிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா மற்றும் குழந்தைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து இந்த ஆய்வு இன்றும் நடக்கிறது. ஆய்வின்போது டீன் வனிதா, சூப்பிரண்டு ஏகநாதன், மருத்துவமனை இருக்கை அதிகாரி சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: