பாரதிதாசன் பல்கலையில் வேதியியல் கருத்தரங்கம்

திருச்சி, டிச.10: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கரிம உலோக வேதியியல் மையம் மற்றும் வேதியியல் பள்ளி இணைந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுவதின் தரத்தினை உயர்த்தும் பொருட்டு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை மற்றும் அமெரிக்கன் வேதியியல் நிறுவனம் (டிஎஸ்டி மற்றும் ஏசிஎஸ்) நிதியுதவியுடன் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களிலிருந்து உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்கள் பலர் பங்கேற்றனர். துணைவேந்தர் மணிசங்கர் தலைமை வகித்தார்.

பதிவாளர் கோபிநாத் வாழ்த்துரை வழங்கினார். மும்பை இந்திய தொழில்நுட்பக்கழக பேராசிரியர் அனன்டியா தத்தா, பெங்களூரு இந்திய அறிவியல் கழக பேராசிரியர் கவுசிக் சட்டர்ஜி ஆகியோர் பணிப்பட்டறையில் விரிவுரையாற்றினர். பேராசிரியர் ரமேஷ், உதவிப் பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

Related Stories: