பூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி, டிச. 10: பூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் பூண்டி அன்னையின் பக்தர்கள் நோயிலிருந்து சுகம் பெறவும், மனபாரத்திலிருந்து விடுதலை பெறவும், குடும்பத்தில் சமாதானம் நிலவவும், பக்தர்களின் தனிப்பட்ட வேண்டுதல் நிறைவேறவும் “பூண்டிமாதா புதுமை இரவு” சிறப்பு வழிபாடு ஒவ்வொரு மாதமும் 8ம் தேதி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர் மறைமாவட்டம் அருட்தந்தை நிர்மல்ராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5.15 மணிக்கு அருள்பொழிவு திருப்பலி, சிறப்பு ஜெபமாலை தேர்பவனி, சிறப்பு நற்கருணை ஆராதனை, இரவு ஜெப வழிபாடு நடந்தன.

Advertising
Advertising

இதில் பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டிமாதா தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி தந்தைகள் ஆரோக்கிய ராஜேஷ், விக்டர் லாரன்ஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். பாபநாசம், டிச. 10: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் காற்று, நீர், மண் மாசுபடுதலை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திட்ட அலுவலர் செல்வகுமார் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் முருகன், வேதியியில் ஆசிரியர் ராஜேஷ் ஆகியோர் பேசினர். இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: