பெரிய கோயில் கட்டிட கலையை பார்த்து வியந்த மகாராஷ்டிரா மாணவர்கள்

தஞ்சை, டிச. 10: தஞ்சை பெரிய கோயிலை பார்வையிட்டு கட்டிட கலையை பார்த்து மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் வியந்தனர். தஞ்சை பெரிய கோயில் யுனஸ்கோ அமைப்பால் அங்கிகரீக்கப்பட்டதாகும். கோபுர விமானம் கலசம் ஒரே கல்லால்லான 80 டன் எடையில் உள்ளது. 216 அடி உயரம் கொண்ட கோபுரத்துக்கு 4 அடி மட்டும் தான் அஸ்திவாரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே கல்லிலான மிகப்பெரிய நந்தி, சிலைகள், சுதை சிற்பங்கள் மற்றும் தங்க இலையால் வரையப்பட்ட ஓவியங்கள், மிகவும் பழங்காலத்து ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை இந்த கோயிலுக்குள் சென்று வந்தாலே மன நிம்மதி, மன நிறைவு ஏற்படும் என்பதால் மாலை நேரங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதேபோல் வெளிநாட்டினர் தினம்தோறும் 1,000க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு கோயிலின் கட்டிட கலைகளை புகைப்படம் எடுத்து கொள்வர். இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் உள்ள டிஒஎஸ் பாட்டீல் ஸ்கூல் ஆப் ஆர்கிட்டெக் என்ற பள்ளியில் இருந்து 33 மாணவர்கள், பிரதீபாசவேரி, சுருதி, மயூரோ ஆகியோர் தலைமையில் வந்தனர்.

அவர்கள் பெரிய கோயிலின் கட்டிட கலைகள், கோயிலின் மதில் சுவற்றில் உள்ள சிற்பங்கள், புடைப்பு சிற்பங்கள், நந்தியின் அழகு, கோபுரம், முருகன் சன்னதி பின்புறம் நவீன முறையில் உள்ள கட்டிட கலைகளை பார்த்து குறிப்பெடுத்து கொண்டனர். மேலும் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு ராஜராஜ சோழன் எத்தனை ஆண்டுகள் எடுத்து கொண்டார் என்பதை பற்றியும் தெரிந்து கொண்டனர். இதுகுறித்து மாணவர்களுடன் வந்த ஆசிரியை கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கட்டிட கலைகள் பற்றி படிக்கும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் போன்ற கட்டிட கலைகளுக்கு உரிய கோயில்களுக்கு அழைத்து வந்து அதுகுறித்து எடுத்து கூறுவோம். பின்னர் எங்கள் பள்ளியில் நடைபெறும் தேர்வில் பார்வையிட சென்ற இடங்கள், அதன் சிறப்புகளை பற்றி எழுத்து தேர்வு வைப்போம் என்றார்.

Related Stories: