கண்ணனாறு உடைப்பால் பெரியகோட்டை கிராமத்தில் தண்ணீரால் மூழ்கிய நெல் சாகுபடி வயல்களில் ஆய்வு

பட்டுக்கோட்டை, டிச. 10: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே வெள்ளப்பெருக்கு காரணமாக கண்ணனாற்றில் ஏற்பட்ட உடைப்பால் பெரியக்கோட்டை கிராமத்தில மூழ்கிய சம்பா நெற்பயிர்களை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கண்ணனாற்று பாலம் உடைப்பு காரணமாக பெரியக்கோட்டை, சொக்கனாவூர், காடந்தங்குடி, காரப்பங்காடு, ஓலையகுன்னம், மதுரபாசாணியபுரம், ரெகுராமசமுத்திரம், சிரமேல்குடி, இளங்காடு, அண்டமி மற்றும் புளியக்குடி உள்ளிட்ட 11 கிராமங்களிலும் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர் பரப்புகளை வருவாய்த்துறையும், வேளாண்மைத்துறையும் கூட்டாக இணைந்து ஆய்வு செய்து அந்த அறிக்கையை விரைந்து கலெக்டருக்கு அனுப்ப வேண்டும் என்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஐஸ்டின், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசன், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பரமசிவம், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) சிங்காரம், வேளாண்மை உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) சாருமதி உடனிருந்தனர்.

Related Stories: