மர்மநபர்களுக்கு வலைவீச்சு குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு தேசிய வங்கிகளில் நிபந்தனையற்ற தொழில் கடன் வழங்க வேண்டும் சிஐடியூ தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கும்பகோணம், டிச. 10: குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு தேசிய வங்கிகளில் நிபந்தனையறற தொழில் கடன் வழங்க வேண்டுமென லேத் தொழிலாளர் சிஐடியூ தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் உலக பிரசித்தி பெற்ற பித்தளை குத்துவிளக்கு உற்பத்தி செய்யும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலுக்கு உறுதுணையாக பணியாற்றும் லேத் தொழிலாளர்களுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. சிஐடியூ தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயபால் பேசினார். இதையடுத்து தொழிற்சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் குத்துவிளக்கு தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தேசிய வங்கிகளில் நிபந்தனையற்ற தொழில் கடன் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் பணிக்கு இடையூறு இல்லாமல் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான லேத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: