பட்டதாரி பெண் கடத்தல்

ஒரத்தநாடு, டிச. 10: ஒரத்தநாடு அருகே பட்டதாரி பெண்ணை கடத்தி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சோழபுரம் காரை கொள்ளை பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மகள் தமிழரசி (24). முதுகலை பட்டதாரி. இவர் ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் உள்ள மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தமிழரசி வீட்டில் தனியாக இருந்தபோது சில மர்மநபர்கள் ஒரு காரில் வந்து தமிழரசியை கடத்தி சென்றனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் தமிழரசின் அண்ணன் ராமச்சந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் தமிழரசியை கடத்தி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: