மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பட்டுக்கோட்டை, டிச. 10: பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். பட்டுக்கோட்டை அடுத்த நைனாங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பையன் (48). இவர் சிவக்கொல்லை பகுதியில் சித்திரைவேல் என்பவருக்கு சொந்தமான வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் வயலில் உரம் இடுவதற்காக சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நேற்று அதிகாலை வயலுக்கு சென்று பார்த்தபோது மின்சார ஒயர் அறுந்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து கருப்பையன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் கருப்பையன் மகன் சரவணக்குமார் (28) புகார் செய்தார். பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: