பைவ் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை, டிச. 10: பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு முதல் 12ம வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி செயலாளர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். முதல்வர் லெட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ராணி வரவேற்றார். நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் ஆசிரியரும், கல்வியாளருமான சீனாதேவர், ரத்னா சாகர் புத்தக பதிப்பின் மேலாளர் பரணி பிரசாத் ஆகியோர் பங்கேற்று கதன்னம்பிக்கை உரையாற்றினர். அப்போது அவர்கள் பேசுகையில், கைபேசி, தொலைக்காட்சி மற்றும் சினிமா ஆகியவற்றால் இன்றைய சமுதாயத்தில் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும், அதிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான அறிவுரை வழங்கினர். 11ம் வகுப்பு மாணவி உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

Related Stories:

>