இளம்பெண் கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு

கும்பகோணம், டிச. 10: கும்பகோணம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம் அடுத்த ஆலமன்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவிதா (17). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் ராஜ். டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் தனது மகள் கவிதா, தம்பி முருகானந்தம் மற்றும் தனது தங்கை ஆகியோருடன் தனது வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

Advertising
Advertising

அப்போது ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மணிகண்டன் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கவிதாவை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கடத்தி சென்றனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: