14ம் தேதி நடக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்

திருக்காட்டுப்பள்ளி, டிச. 10: தஞ்சை மாவட்டம் கல்லணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகூர் பகுதி கூட்டம் கிளை செயலாளர் அகிலா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தோகூர் பேப்பர் மில் பகுதியில் மழையால் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும். தோகூர்- வேங்கூர் தார் சாலையின் இருபுறமும் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும், சுற்றுலா தலமான கல்லணை பாலம் அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்தி, சம்சுதீன், ரமேஷ், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>