கீழமை நீதிமன்றங்களில் அரசு போக்குவரத்து கழக வழக்குகளுக்கு லோக் அதாலத்

தஞ்சை, டிச. 10: மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் வரும் 14ம் தேதி அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண லோக் அதாலத் நடக்கிறது. அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண லோக் அதாலத் நடக்கிறது. இந்த லோக் அதாலத்தில் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொடர்பான மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரச தீர்வு கண்டு சம்பந்தப்பட்டோர் பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: