×

வேட்பு மனுதாக்கல் துவக்கம் பயிர் காப்பீடு செய்ய டிச.25 வரை கால அவகாசம்

மணமேல்குடி, டிச.10: பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு டிசம்பர் 25ம்தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த வெள்ளூர் ஊராட்சி உடையார்கோவில் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் பழனி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் ராமநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், இந்த ஆண்டு பயிர்காப்பீடு பதிவு செய்ய வருவாய்த்துறை கணக்கு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செலுத்த மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்ற உத்தரவால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே டிசம்பர் டிசம்பர் 25ம்தேதி வரை காப்பீடு செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும். பயிர்காப்பீடு செய்வதில் பல குளறுபடி நடந்துள்ளது. வரும் காலங்களில் முறைப்படுத்தவேண்டும். உடையார்கோவில், சுந்தராஜபுரம் செல்லும் குயிருப்பு சாலை பாலம் இல்லாததால் மக்கள் தண்ணீரில் நடந்து செல்கின்றனர். உடனே அந்த பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...