×

அதிகாரிகள் அதிரடி ஆய்வு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30ம் தேதி 2 கட்டமாக வாக்குப்பதிவு

புதுக்கோட்டை, டிச.10: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் நேற்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி 16-ந் தேதி வரை விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் அதற்கென வரையறுக்கப்பட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 24 பேரும், குன்னண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 4 பேரும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5 பேரும்,

விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 18 பேரும், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 13 பேரும், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 10 பேரும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 3 பேரும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும் என புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல ஊராட்சி மன்ற தலைவரும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 பேரும், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 3 பேரும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும் என 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

Tags : Action Action Voting ,Rural Local Authorities ,
× RELATED ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2ம் கட்ட...