×

முன்னாள் ஒன்றிய சேர்மன் மனைவி வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்

பொன்னமராவதி, டிச.10: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 11,12வது மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கும் வேட்பு மனுக்கள் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முதல் வேட்பு மனு வாங்கும் பணி துவங்கியது. இதில் வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜீ மனைவி சுமதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தராஜனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுமதி. இவர் ஏற்கனவே 1முறை ஒன்றியக் கவுன்சிலராக இருந்துள்ளார். இவரது கணவர் ராஜீ.ஒன்றிய சேர்மனாகவும், திமுக ஒன்றியச் செயலாளராகவும் இருந்துள்ளார். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் வேந்தன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜீ மனைவி சுமதியை தவிர நேற்று யாரும் வேட்பு மனு செய்யவில்லை.

இதில் 11.12 வது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டரின் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கிருஷ்ணன், வேளாண்மை உதவிஇயக்குனர் சிவராணி, ஆகியோரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் சங்கரகாமேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாமிநாதன், வேளாண்மை உதவி அலுவலர் கவிதா ஆகியோரும், 42 ஊராட்சி தலைவர் பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக துணைவட்டார வளர்ச்சி ஆலுவலர்கள் மணிகண்டன், ராணி, சேகர், சேகர், ரகுநாதன், கோவிந்தராஜன், சகாயராணி, ஆகியோரும் வேட்பு மனுக்கள் பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

Tags : Vandanpatti ,union chairman ,
× RELATED குளத்தூரில் புதிய கலையரங்கத்திற்கு அடிக்கல்