ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

பெரம்பலூர்,டிச.10: பெரம்பலூர் மாவட்டம், குன் னம் தாலுக்கா, சு.ஆடுது றை கிராமத்தைச் சேர்ந்த வர் பெரியசாமி மகள் திவ்யப்பிரியா(22). கடந்த 2017 பேட்ஜில் பணியில் சேர்ந்த இவர் தற்போது ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இதற்காக தண்ணீர் பந்தல் ஆயுதப் படை வளாகத்திலுள்ள போலீஸ் குடி யிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தன து குடியிருப்பில் வைத்திரு ந்த பினாயிலைக் குடித்து விட்டு திவ்யப் பிரியா மயக்கமானார். இதனை அறிந்த இதர போலீசார் மயக்கமான பெண் போலீஸ் திவ்யப் பிரியாவை பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பிறகு அவர் மேல்சிகிச் சைக்காக திருச்சிக்கு அனு ப்பி வைக்கப்பட்டார். பெண் போலீஸ் தற்கொலை முய ற்சியை மேற்கொண்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

Tags :
× RELATED பெரம்பலூரில் 31ம் தேதி...