×

ரூ.75.000 மதிப்புள்ள நெக்லஸ் கண்டெடுப்பு: தொலைத்த பெண்ணிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர்,டிச.10: பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் ஊராட்சியின் நடுத்தெருவில் வசித்துவரு பவர் ராஜதுரை மனைவி உத்தமிழ்ச்செல்வி (46). இவர் அதே பகுதியில் உள்ள கோவில் பூசாரி ஒரு வரிடம் மந்தரித்த திருநீர் பிடிப்பதற்காக டிசம்பர் 8ம் தேதி இரவு சென்றுள்ளார். பூசாரியிடம் சென்று வரும் போது தனதுபேத்தியைக் கைகளில் தாங்கியபடி தூக்கிக்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்தக் குழந்தையின் கைகள் இவரின் கழு த்தில்பட்டு இழுக்கப் பட்ட தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் தவறு தலாக கீழே விழுந்துவிட் டது. பின்னர் இவர் வீட்டிற்கு வந் து பார்த்தப் பிறகுதான் தன து கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் காணமால் போ னது தெரியவந்தது. இத னையறிந்தவுடன் உத்தமி ழ்ச் செல்வி கதறி அழுது ள்ளார். இரவு முழுவதும் தான் நடந்து சென்றுவந்த பாதையில் நடையாய் நடந்து தேடிப் பார்த்தும் நெக்லஸ் கிடைக்க வில்லை.

இதனிடையே நெக்லஸ் காணாமல் போனது பற்றி டிசம்பர் 9ம்தேதி ஊர்முழு வதும் தண்டோரா மூலம் கிராமபொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஓம்  ஜயப்பசேவா சங்க பக்தர் ராஜேந்திரன் மகன் ராஜா ராம்(25) என்பவர் அன்றி ரவு தற்செயலாக பொன்னரும்புபெட்டிக்கடை அருகில் நடந்துசென்றபோது கீழே மின்னிய தங்க நெக்லஸை க்கண்டு பிடித்துள்ளார். பிறகு அதனை யாருடையது என்பது தெரியாததால் போலீசிடம் ஒப்படைக்க லாம் என முடிவுசெய்து பத்திரமாக வைத்திருந்தார்.

பிறகு தண்டோரா தகவ லின்படி ராஜாராம் உள்ளிட்ட ஐயப்பபக்தர்கள் அனை வரும் ஒன்று சேர்ந்து நகையைக் கீழே தவறவிட்ட உத்தமிழ்ச்செல்வியிடம் சென்று அவர்நகைதான் என்பதை உறுதிப்படுத்திய பிறகு நகையை ஒப்படைத்தனர்.
இந்த நகை ரூ75ஆயிரம் மதிப்புடையது ஆகும்.இந்த நேர்மையான செயலைக் கண்டும் கேள்விப் பட்டும், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் ராஜாராமை பாராட்டினர். ஐயப்ப பக்தரின் நேர்மைக்கு மக்கள் பாராட்டு

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா