×

கேங்மேன் பணியிடத்திற்கான உடல் தகுதி தேர்வு

பெரம்பலூர்,டிச.10: பெரம்பலூரில் மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் பணியிடத்திற்கான உடல் தகுதித் தேர்வு நடந்தது. 200பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற 107பேரில் 27 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அளவில் மின்வாரி யத்தில் கம்பம் நடுதல், கம்பிகளை இழுத்துக் கட்டுதல், புதிய மின் பாதைக ளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள் ளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேங்மேன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மின்வாரிய த்தின் மூலம் ஏற்கனவே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இதன்படி விண்ணப்பித்தவர்களில் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட நபர்களுக்கு நேற்று உடல் தகுதித் தேர்வு மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந் து விண்ணப்பித்தவர்களி ல் உடல் தகுதித் தேர்வுக்கு பங்கேற்பதற்காக 200பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதில் 5பெண்கள் உள்பட மொத்தம் 107 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்காக பெரம்பலூர் 4 ரோடு அருகேயுள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் கேங்மேன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதித் தேர்வு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சுப்பையா மேற்பார்வை யில் நேற்று நடைபெற்றது. செயற் பொறியாளர் (பொ து)சேகர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அசோ க்குமார் உள்ளிட்டோர் உட ல்தகுதித் தேர்வை முன்னி ன்றுநடத்தினர். இந்த உடல் தகுதித்தேர்வில் 30அடி உயரமுள்ள மின்கம்பத்தில் ஏறி, டிஸ்க் பொருத்துவது, மின்கம்பிகளை இணைப்பது, இழுத்துக்கட்டுவது உள்ளிட்ட பணிகளை செயது காண்பித்தனர். அப்போது யாரேனும் தவறி கீழே விழுந்து, படுகாயம் அடையாதிருக்க தகுதித் தேர்வு நடத்தப்பட்ட கம்ப த்தின் கீழே தவறி விழுபவர்களைத் தாங்கிப் பாதுகாத்திட வலை கட்டப் பட்டிருந்தது.

இந்த உடல் தகுதித் தேர்வினை கரூர் மாவட்டத்திலிருந்து வந்திருந்த தேர்வுக்குழு வினர்நடத்தினர்.அதில் பங்கேற்ற 107பேரில் பல்வேறு விதிகளின் அடிப்ப டையில் 27 பேர்கள் மட்டு மே தேர்வு செய்யப்பட்ட னர். இந்த உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்காக பெரம்பலூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் 2 முறை 100க்கும்மேற்பட்டோருக்கு இலவசப் பயிற்சிகள் அளி க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்ற 107 பேரில் 27 பேர் தேர்வு

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ரெஸ்டாரண்ட் திறப்பு; விண்ணப்பித்தவர்களில் உடல் தகுதித் தேர்வுக்கு பங்கேற்பதற்காக 200பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதில் 5பெண்கள் உள்பட மொத்தம் 107 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

Tags : Gangman Workplace ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது