×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரியலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் துவக்கம்

அரியலூர், டிச. 10: அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல்நாள் முடிவில் 9 பேர் ஊராட்சி தலைவர் பதவிக்கும், 120 பேர் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் மனுதாக்கல் செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்கள், 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 201 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் மற்றும் 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 2 கட்டங்களாக வரும் 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்பியவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல்செய்தனர். இதையொட்டி 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. ஊராட்சி ஒன்றிய விளம்பர பளகைகளில் தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெங்கடரமணபுரத்தை சேர்ந்த பிரேம்குமார் (40), அவரது மனைவி உமாதேவி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல் நாள் முடிவில் 9 பேர் ஊராட்சி தலைவர் பதவிக்கும், 120 பேர் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். முதல்நாளில் 129 பேர் மனுதாக்கல்

Tags : elections ,Ariyalur district ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...