×

நெல் வயலில் இயற்கை முறையில் விவசாயிகளுக்கு ஆலோசனை

அரியலூர், டிச.10: நெல்வயலில் இயற்கை முறையில் பூச்சிக்கட்டுப்பாட்டிற்கு வெண்டை, உளுந்து, துவரை பயிரிடலாம் என விவசாயிகளுக்கு  வேளாண்  அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நெல் சாகுபடி வயல்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது பூச்சிகளாகும். இதை கட்டுப்படுத்த சாகுபடி வயல் வரப்புகளில் மஞ்சள்நிறபூக்களை கொண்ட உளுந்து, துவரை, சூரியகாந்தி, வெண்டை, செவ்வந்தி பூ போன்ற உபரி வருமானம் தரக்கூடியபயிர்களை பயிரிடுவதன் மூலம் தீமை செய்யும் பூச்சிகள்கவரப்பட்டு நெல் பயிர் பாதுகாக்கப்படுகிறது. மேலும் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்தி, குளவி, தட்டான் போன்றவைவயலில் அதிகம் இருக்க ஏதுவானசூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.தீமை செய்யும் பூச்சிகளை விரட்டமூலிகை பூச்சி விரட்டி மற்றும் மூலிகை கசாயம் பயன்படுத்தலாம்.

இவைகள் பயிர்களுக்கு ஊக்கிகளாகவும் பயன்படுகிறது. இதன் மூலம் வயலில் நன்மை செய்யும் பூச்சிகள்அதிகரிக்கும். நெல்லில் மகரந்த சேர்க்கை எளிதாக நடைபெற்று செழிப்பான, வாளிப்பான நெற்கதிர்கள்உண்டாகும்.பதர்கள் குறைந்து அதிகஎடை கொண்ட நெல் மணிகள்கிடைக்கும். மேலும் பறவைக்குடில் அமைப்பதால் இரவு நேரங்களில் ஆந்தைகள்அமர்ந்து எலிகளை கட்டுப்படுத்துகிறது.\எனவே ராசயணபூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக மகசூலும், லாபமும், நஞ்சில்லாத உணவும் மக்களுக்கு கிடைக்கும். விவசாயத்தை லாபகரமாகவும் மாற்ற முடியும்.வரப்பு சாகுபடி பயிர்களால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாப்பதால் உயிர்பன்மயம் பாதுகாக்கப்படும், நிலம் செழிப்பானதாக மாறி மண் புழு பெருக்கமும் அதிகரிக்கும். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்.

தீமை செய்யும் பூச்சிகளை விரட்டமூலிகை பூச்சி விரட்டி மற்றும் மூலிகை கசாயம் பயன்படுத்தலாம். இவைகள் பயிர்களுக்கு ஊக்கிகளாகவும் பயன்படுகிறது. இதன் மூலம் வயலில் நன்மை செய்யும் பூச்சிகள்அதிகரிக்கும். நெல்லில் மகரந்த சேர்க்கை எளிதாக நடைபெற்று செழிப்பான, வாளிப்பான நெற்கதிர்கள்உண்டாகும்.

Tags : field ,paddy field ,
× RELATED மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா