×

திருப்புத்தூர் ஆதி திருத்தளிநாதர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

திருப்புத்தூர், டிச. 10:  திருப்புத்தூர் ஆதிதிருத்தளிநாதர் கோயிலில் கார்த்திகை சோம வார திங்களை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.திருப்புத்தூரில் குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட கோயில்களில் மிகப்பழமையானதும், தொன்மை வாய்ந்த கோயிலுமான மேலக்கோயில் என்று அழைக்கப்படும் ஆதித் திருத்தளிநாதர் கோயிலில் கார்த்திகை மாத சோமவார திங்களை \முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக  நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜாப்பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது.  தொடர்ந்து சிவாச்சாரியர்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு கலசங்களுக்கு யாகவேள்வி பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலவரான சிவனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர்.  பக்த்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆதித்திருத்தளிநாதர் கோயில் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.  



Tags : 108 Sankabishekha Ceremony ,Adi Thirupalinathar Temple ,Tirupputhur ,
× RELATED திருப்புத்தூர் நூலகத்தில் தேசிய நூலக வார விழா