×

விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கும் விழா

சிங்கம்புணரி, டிச. 10: சிங்கம்புணரியில் நெல் ஜெயராமன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஐந்திணை வேளாண் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பாக விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்குதல் மற்றும் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 50 விவசாயிகளுக்கு 2 கிலோ வீதம் மாப்பிள்ளை சம்பா, குள்ளங்கார், தூயமல்லி சின்னாரு ஆகிய பாரம்பரிய விதை நெல்கள் மற்றும் நாட்டு தென்ங்கன்றுகள் வழங்கப்பட்டது.  தாளாங்குளத்தில் 100 பனை விதைகள் நடப்பட்டது. இதில் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவன தலைவர் அருண் தலைமை வகித்தார். ஆயில் மில்களின் தலைவர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்,பாண்டியன், மருதுஅழகுராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியின் இயக்குநர் ராஜமூர்த்தி  மருத்துவர் அருள்மணி நாகராஜன், சத்தியசீலன், தொழிலதிபர் சிவா, சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Seed ,Paddy Ceremony for Farmers ,
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு