×

பாதுகாப்பற்ற கட்டிடங்களில் ஆசிரியர்கள் வகுப்பு நடத்த கூடாது தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை, டிச. 10:  சிவகங்கை மாவட்டத்தில் பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளியில், சுகாதார கண்காணிப்பு குழு தங்கள் தலைமையில் அமைத்து, பள்ளி வளாகங்களை துய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போதிய விடுமுறைகள் வழங்கவும், குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களிடமும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வினையும், பாதுகாப்பு முறைகளையும் பற்றி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டிகளை துய்மை செய்ய நடவடிக்கை எடுத்து அதை கண்காணிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளையும், பள்ளி வளாகங்களையும் தூய்மையாக வைத்திருப்பதை, அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மழையால் தொடர்ந்து கட்டிடங்கள் ஈரமாக உள்ளது. எனவே பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களில் மாணவ, மாணவிகளை வைத்து வகுப்பு நடத்தக்கூடாது. பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் எக்காரணத்தைக் கொண்டும் மாணவ, மாணவிகளை படிக்க வைக்கவோ, விளையாட விடவோ கூடாது. பள்ளி கட்டிடங்களுக்கு உரிய கட்டிட உரிமச்சான்று வைத்திருக்க வேண்டும். உயர் அலுவலர்களால் பள்ளியை ஆய்வு செய்யும் போது டெங்கு சார்ந்த விழிப்புணர்வு இல்லாத மற்றும் தூய்மை பணி செய்யாத பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags : Teachers ,buildings ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...