×

பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்புழு அழிவை நோக்கி செல்கிறது சிங்கப்பூர் பல்கலை இணை இயக்குநர் வேதனை


காரைக்குடி, டிச. 10:  பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் மண்ணில் கொட்டப்படுவதால் உணவு கிடைக்காமல் மண்புழு இனம் அழிவு பாதை நோக்கி செல்கிறது என சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குநர் பரசுராமன்பத்மநாதபன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறை சார்பில் ஸ்பார்க் மற்றும் ரூசா 2.0 நிதியுதவியில் பயோபிளாஸ்டிக் தற்போதைய வளர்ச்சி குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பின் சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குநர் பரசுராமன் பத்மநாதன் கூறுகையில், ‘வேஸ்ட் மேனேஜ்மென்ட் கையாளுவதில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்தியா பின்தங்கி உள்ளது.
 2025க்கு பிறகு பெட்ரோலியம் அல்லாத பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பெட்ரோலிய பொருட்களில் இருந்து 4 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 125 ஆண்டுகளில் 3 திரிலியன் கச்சா பேரல் பயன்படுத்தப்பட்டுள்ளது இதில் 4 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு உலகுக்கு கேடு. கடலில் பாதி உயிரினங்கள் அழிந்துவிட்டன.

கடலின் மேற்பரப்பில் பாலித்தீன் படவதால் மிதவை உயிரினங்கள் மூலம் கடல்வாழ் உயிரினங்களுக்கு கிடைக்க கூடிய ஆக்ஜிசன் கிடைக்காமல் போகிறது. அதபோல் மண்ணில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவு சேர்வதால் மழைநீர் நிலத்துக்குள் உள்ளே புக முடியாமல் போவதோடு நுண்ணுயிரிகள் அழிந்து போகின்றன இதன்மூலம் மண்புழுக்கள் அழிவை நோக்கி செல்கிறது. கடலில் உலகளவில் 4 முதல் 12 மில்லின் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதற்கு மாற்றாக தாவரகழிவு, கரும்பு, மக்காசோளம் உள்பட பல்வேறு இயற்கை கழிவுகளில் இருந்து பயோ பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பயோ பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதால் இந்த பயோ பிளாஸ்டிக் விலை அதிகமாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் பயோ பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிக்க வேண்டும். இதற்கான ஆராய்ச்சிகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என மக்கள், பள்ளிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றார். மைக்ரோ பயாலஜி துறை தலைவர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்