×

தண்ணீர் சூழ்ந்து தனித்தீவான சம்பை கிராமம்

தொண்டி, டிச.10: சம்பை கிரராமத்தில் கடும் மழையால் தேங்கிய தண்ணீரை வெளியேற்றாததால் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தொண்டி அருகேயுள்ள முகிழ்த்தகம் ஊராட்சி சம்பை கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை விட்ட பிறகும் ஊராட்சி நிர்வாகம் தண்ணீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நாள்களாக தண்ணீர் கிடப்பதால் கொசு உற்பத்தியாகி நோய் பரவ ஆரம்பித்து விட்டது. பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர்கள் தண்ணீரில் நடந்தெ செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதி மக்கள் ஊராட்சியில் முறையிட்டும் பலன் இல்லை என புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நாகூர் கனி கூறியது, சம்பை கிராமத்தில் அனைவருமே கூலி தொழிலாளிகள். காலையில் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள இவர்கள் தற்போது  தண்ணீர் தேங்கி கிடப்பதால் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற பகுதியில் நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகம் இங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றார்.




Tags : Sampai Village ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை