×

மழை பெய்ய வாய்ப்பு சீரான மின்சாரம் வழங்கக் கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை

ஆர்.எஸ்.மங்கலம், டிச.10: சித்தூர்வாடி பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்காததால் அப்பகுதி பொதுமக்கள் ஆர்.எஸ்.மங்கலம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுறுகையிட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் சித்தூர்வாடி ஊராட்சி வெட்டுக்குளம், சித்தூர்வாடி கோவிலேந்தல், கீழ சித்தூதூர்வாடி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அதனை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக உப்பூரில் உள்ள துணை மின் நிலையத்தின் மூலமாக இப்பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உப்பூர் துணை மின் நிலையத்திற்கு மாற்றியதில் இருந்தே இப்பகுதிக்கு முறையான மின் சப்ளையும், மின் பராமரிப்பும் இல்லை. உப்பூர் அனல்மின் நிலைய பணிக்காகவே கிராமங்களுக்கு செல்லும் மின்சாரத்தை அடிக்கடி துண்டிக்கப் படுவது பற்றி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் சித்தூர்வாடி முன்னாள் ஊராட்சி தலைவர் வாசுதேவன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மின்வாரிய அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாததால் அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்டனர். இதனை அடுத்து  பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை