ஊராட்சி வார்டுக்கு 81 பேர் மனு தாக்கல் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு

மதுரை, டிச.10: மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் தலைவர் பூபதி தலைமையில் கலெக்டர் வினயிடம் நேற்று மனு அளித்தனர்.அந்த மனுவில், மதுரை பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடி மருத்துவ பிரிவு விற்பனையாளராக இளையராஜா உள்ளார். மாற்றுத்திறனாளியான இவரை கூட்டுறவு சங்கத்தலைவர் அறையில் வைத்து, சங்கத்தலைவர் பெயர் பலகை இல்லாததற்காக தாக்கி உள்ளனர். எனவே இளையராஜாவை தாக்கியவர்கள் மீது ஊனமுற்றோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.வெறிச்சோடிய வாடிப்பட்டிவாடிப்பட்டி ஒன்றியத்தில் திருவாழவாயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கணேசன், தென்கரை ஊராட்சி மன்றத்தில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு செண்பகம் என இருவர் மட்டுமே முதல் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற குழப்பம் நிலவுதால் வேட்புமனு தாக்கலில் போதிய ஆர்வமில்லாமையால் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியே காணப்பட்டது. அலங்காநல்லூர் யூனியனில் மாணிக்கம்பட்டி, ஊர்சேரி உள்ளிட்ட கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மனுவாங்க வந்தவர்கள் தேர்தல் நடக்குமா என்று தேர்தல் பார்வையாளர்களிடம் சந்தேகத்துடன் கேள்வி கேட்டு சென்றனர்.

திருமங்கலத்தில் ஒருவர்கூட இல்லை திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள், 38 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்களுக்கு வேட்புமனு தாக்கலுக்கான தேர்தல் பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மூன்று பதவிகளுக்கும் யாரும் முதல் நாளான நேற்று மனுதாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு மூன்று பேர் மனுதாக்கல் செய்தனர். முதல்நாளில் ஒன்றியகவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோருக்கான மனுக்களை ஏராளமானோர் வாங்கி சென்றனர்.

Related Stories: