வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்ைக பாயும்

மதுரை, டிச.10:தமிழகத்தில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரத்து குறைவு காரணமாக கிலோ ரூ.20க்கு விற்பனையான வெங்காயம் தற்போது ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதனால் சமையலுக்கு அத்தியாவசிய பொருளான வெங்காயத்தை சாமானிய மக்கள் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறு உணவகம் முதல் பெரிய ஓட்டல்கள் வரை வெங்காயத்தின் விலை மிரட்டி வருகிறது. இதற்கிடையே வெங்காயத்தை பதுக்கி வைப்பது மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘‘தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரவழைக்கப்பட்ட வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. வியாபாரிகள் 5 டன்னும், மொத்த வியாபாரிகள் 50 டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வைக்க கூடாது. மேலும் கிலோ ரூ.90க்கு மேல் விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது தொடர்பாக புகார் வந்தால் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

Related Stories: