வியாபாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை வழிப்பறி கும்பல் கைது நகை, செல்போன் பறிமுதல்

மதுரை, டிச. 10: மதுரை நகரில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பழனிகுமார் மேற்பார்வையில் தெப்பக்குளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.  தெப்பகுளம் பகுதியில் செல்போன் வழிப்பறி சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் ஓபுளாபடித்துறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை செய்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.  விசாரணையில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஜெல் என்ற சல்மான்கான்(23), நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல்ரகுமான்(19), முகமது அன்சாரி(18) என தெரியவந்தது. அவர்களை கைது செய்து, 4 பவுன் நகை, 5 செல்போன்கள், ஒரு டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும் இவர்கள் மீது நகரில் வழிப்பறி, திருட்டு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

Related Stories: