ைவகையில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம்

மதுரை, டிச.10: மதுரை மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி  மதிப்பீட்டில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கமிஷனர் விசாகன் ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட அவனியாபுரம் மாநகராட்சி காலனி பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. மேலும் பந்தல்குடி கால்வாயிலிருந்து வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுத்து சுத்திகரிப்பு செய்வதற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக கமிஷனர் ஆய்வு செய்தார். வைகை ஆற்றின் தெற்குகரைப் பகுதியில் உள்ள பனையூர் கால்வாயிலிருந்து மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆற்றுடன் இணைப்பு வாய்க்கால் கட்டும் பணியை அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி கமிஷனர் பழனிச்சாமி, செயற்பொறியாளர்கள் சந்திரசேகர், ராஜேந்திரன்,  முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: