×

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல்

திண்டுக்கல், டிச. 10: உள்ளாட்சி தேர்தல் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தலும், 7 ஒன்றியங்களில் 2ம் கட்ட தேர்தலும் நடக்கவுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் டிச. 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் துவங்கியுள்ளது. நேற்று அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், சுயேச்சைகள் பலரும் பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 306 கிராம ஊராட்சி தலைவர், 2772 கிராம ஊராட்சி வார்டு, 232 ஒன்றிய கவுன்சிலர், 23 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 3333 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. நடைபெற உள்ள தேர்தலில் 31 தேர்தல் அலுவலர்கள் 429 உதவி தேர்தல் அலுவலர்கள் என மொத்தம் 460 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக டிச. 27ம் தேதி ஆத்தூர், வத்தலக்குண்டு, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் 144 கிராம ஊராட்சி தலைவர்கள்,1401 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 125 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள், 13 மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தம் 1683 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது இரண்டாம் கட்டமாக டிச. 30ம் தேதி குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் 162 கிராம ஊராட்சி தலைவர், 1371 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 107 ஒன்றிய கவுன்சிலர்,10 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 1650 பதிவுகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு நேற்று வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 6 பேரும், உறுப்பினர் பதவிக்கு 142 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்

Tags : election ,Dindigul district ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...