×

சர்வதேச மனித உரிமைகள் தினம்

பழநி, டிச. 10: பழநியில் சாலையின் நடுவில் தூசி எழும்பாமல் தடுக்க இயற்கை மூலிகை செடிகள் நடப்பட்டன. பழநி பஸ் நிலையத்தின் முன்புறமாக சாலையின் இருபாதைக்கும் நடுவில் உள்ள தடுப்புப்பாதையில் தூசி மேலே எழும்பாமல் தடுக்கவும், வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் பழநி அரசு மருத்துவமனையின் சித்த வைத்தியப்பிரிவின் சார்பில் இயற்கை செடிகள் நடப்பட்டன. சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் தலைமையிலான குழுவினர் சாலையின் நடுவில் மருள் நாகதாளி, சோற்றுக்கற்றாழை, கல்வாழை மற்றும் கல்லடைப்பு நீங்கக்கூடிய கல்கரைக்சி என்று அழைக்கக்கூடிய இரணகள்ளி போன்ற அழகிய இயற்கை செடிகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் கட்டிடவியல் வல்லுநர் நேரு, தேவதாஸ் சீனிவாசன், ரோட்டரி சங்க நிர்வாகி பாட்டையா பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : International Human Rights Day ,
× RELATED அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைகள் தின விழிப்புணர்வு