×

வதிலை-மருதாநதி அணை பஸ் நிறுத்தத்தால் அவதி

பட்டிவீரன்பட்டி, டிச. 10: வத்தலக்குண்டுவில் இருந்து மருதாநதி அணைக்கு தேவரப்பன்பட்டி வழியாக நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.வத்தலக்குண்டுவில் இருந்து பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், சின்னகவுண்டன்பட்டி, தேவரப்பன்பட்டி, அய்யம்பாளையம் வழியாக மருதாநதி அணை வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸசை இப்பகுதி விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எடுத்து செல்லவும், இடுபொருட்களை வாங்கி வரவும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இப்பகுி பொதுமக்கள் தங்களது பல்வேறு தேவைக்காகவும், மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும இந்த பஸ்சையே பயன்படுத்தி வந்தனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டது.வத்தலக்குண்டுவிலிருந்து பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி வழியாக மருதாநதி அணைக்கு சென்று வந்த அரசு பஸ் தேவரப்பன்பட்டிக்கு காலை 5.30 மணிக்கு சென்று மறுமார்க்கத்தில் மருதாநதி அணையிலிருந்து கிளம்பி காலை 9 மணிக்கு தேவரப்பன்பட்டி வழியாக வத்தலக்குண்டு சென்று வந்தது. இதேபோல் மதியம் 2 மணி, மாலை 3.30 மணி, 4.30 மணி, 6 மணி என இந்த மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை வத்தலக்குண்டு பணிமனை நிர்வாகம் திடீரென நிறுத்தியது.இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவ- மாணவிகள் வத்தலக்குண்டு செல்ல தேவரப்பன்பட்டியிலிருந்து 1 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று தேவரப்பன்பட்டி பிரிவில் பஸ் ஏறி செல்கின்றனர். மேலும் சிலர் கூடுதல் கட்டணம் கொடுத்து ஷேர்ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வத்தலக்குண்டுவில் இருந்து மருதாநதி அணை வரைவிலான நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Vadilai-Maradanathi Dam ,bus stops ,
× RELATED பேருந்துகள் சீக்கிரமே டெப்போவுக்கு...