×

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா

நத்தம், டிச. 10: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அங்குள்ள ராஜகோபுரம் சன்னதி முன்பாக உள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு விஷேச பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

Tags : ceremony ,Prathosha ,Kattasanathar Temple ,Natham Kovilpatti ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா