வாலிபர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

சேலம், டிச.10:  சேலத்தில் வாலிபர் கொலை வழக்கில் கைதான 3 ேபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  சேலம் அம்மாப்பேட்டை பெரியகிணறு பகுதியை சேர்ந்தவர் கவுதம்(23). பழனிச்செட்டி ெதருவை சேர்ந்த தீபக்(எ) அஜீத்(23), கதிர்(எ) கதிரேசன்(25) ஆகியோர், தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த அக்டோபர் 27ம் தேதி, அபுபக்கர் என்பவரை கட்டையால் அடித்து கொலை செய்தனர். பின்னர், அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனி பஸ் ஸ்டாப் பகுதியில் நடந்து வந்த சாபீர் என்பவரை வழிமறித்து, கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். அப்புகாரின் பேரில், அம்மாப்பேட்டை போலீசார், மூவரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், கவுதம், கதிர், தீபக் ஆகியோர், தங்களது நண்பர் பிறந்த நாளை மாதேஸ்வரன் கோயில் அருகே ரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது அவ்வழியே வாகனத்தில் வந்த குணசேகரனிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளில் பேசி சரமாரியாக தாக்கினர். அந்த வழக்கில், அம்மாப்பேட்டை போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த இவர்கள், தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு, அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பரிந்துரை செய்தார். இதனை பரிசீலித்த போலீஸ் கமிஷனர், கவுதம் கதிர், தீபக் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடம், அதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

Related Stories: