×

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் 8 பஞ்., தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

பள்ளிபாளையம், டிச:10:  பள்ளிபாளையம் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் 8 ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், இந்த முறை 8 இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. எலந்தகுட்டை, களியனூர், களியனூர் அக்ரஹாரம், பாதரை, பாப்பம்பாளையம், புதுப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் பொதுவான ஊராட்சிகளாக உள்ளது. இங்கு, ஆண்- பெண்கள் என அனைவரும் போட்டியிடலாம். கொக்கராயன்பேட்டை, குப்பாண்டபாளையம், ஓடப்பள்ளி, பல்லக்காபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், சௌதாபுரம், தட்டாங்குட்டை ஆகிய 7 ஊராட்சிகளில் பெண்கள் பொது பிரிவினருக்கும், காடச்சநல்லூர் ஊராட்சி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், சமயசங்கிலி அக்ரஹாரம் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கெனவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு பட்டியல் நேற்று பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.





Tags : women ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ