×

நாமக்கல்லில் சோனியாகாந்தி பிறந்த தினம் கொண்டாட்டம்

நாமக்கல், டிச.10: நாமக்கல்லில், மாவட்ட காங்கிரஸ் சார்பில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஷேக் நவீத் தலைமை வகித்து, கேக் வெட்டினார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்கு, காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில், காமராஜர் நினைவு கல்வி உதவித்தொகையாக 15 பேருக்கு ₹75 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் மோகன்தாஸ், வட்டார தலைவர்கள் சுந்தரம், இளங்கோ, நகர செயலாளர் குப்புசாமி, மாதேஸ்வரன், நூர் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குமாரபாளையம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்தநாள் விழா குமாரபாளையத்தில் நடைபெற்றது. தம்மண்ண செட்டியார் வீதி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவிற்கு நகர தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் சுப்பிரமணியம், சிவக்குமார், பார்த்தசாரதி, பொருளாளர் சிவராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் கோகுல்நாத், நிர்வாகிகள் தங்கராஜ், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Sonia Gandhi Birthday Celebration ,Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...