×

தென்பெண்ணையாற்று பகுதியில் மேம்பாலத்திற்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்

போச்சம்பள்ளி, டிச.10: போச்சம்பள்ளி அருகே, மஞ்சமேடு தென்பெண்ணையாற்று பகுதியில் மரங்கள்,மேம்பாலத்திற்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையோரங்களில், ஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. இதை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர். புளியம்பழம் மூலம், அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மழையின்றி புளியமரங்கள் பட்டு போய் இலைகள் உதிர்ந்து காணப்பட்டன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால், சாலையோர மரங்கள் செழித்து காணப்படுகிறது. இதனால், இந்தாண்டு புளி விளைச்சல் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலையோரங்களில் புளியமரங்களை பாதுகாக்கும் வகையில், வர்ணம் பூசும் பணி மும்முமாக நடந்து வருகிறது. இதனால், புளியமரங்கள் பளிச்சென்று காணப்படுகிறது. அதேபோல், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்திற்கும் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.


Tags : area ,Thenpennyariyadu ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி