×

மாவட்ட அளவில் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி, டிச.10: கிருஷ்ணகிரியில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி அணிகள் பங்கேற்கலாம். லீக் முறையில் நடைபெறும் இப்போட்டியில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்படும். இதில் பங்கேற்கும் வீரர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயில்பவர்களாக இருக்க வேண்டும். பள்ளி அணிகளை பதிவு செய்ய வருகிற 25ம் தேதி கடைசி நாளாகும். மேலும், லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், மாவட்ட அளவிலான 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யும் அணி வீரர்களுக்கு சிறப்பு முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, 2020ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கு இடையேயான 14 மற்றும் 16 வயது போட்டிகளில் விளையாட அழைத்து செல்லப்படுவார்கள். 14 மற்றும் 16 வயதினருக்கான மாவட்ட அணிக்கான தேர்வு முகாம் தனியாக நடத்தப்படமாட்டாது. பள்ளி அணிகளுக்கான லீக் போட்டியில் கலந்துகொள்பவர்களை மட்டுமே மாவட்ட அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அணிகளை பதிவு செய்து கொள்ள சங்கத்தின் இணை செயலாளர்கள் சிவசங்கர், நவீன்.பி.ராஜப்பா ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : District level cricket tournament ,
× RELATED ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி