×

பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு வரையறையில் குளறுபடி

தர்மபுரி, டிச.10: பாலக்கோடு பேரூராட்சியில் இஸ்லாமியர்கள் வார்டுகளில் வரையறை செய்ததில் குளறுபடி நடந்துள்ளதால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாலக்கோடு பேரூராட்சி வார்டு இஸ்லாமிய மக்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 16 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,2,3,4,11,12,13 ஆகிய 7 வார்டுகளில் இஸ்லாமிய வாக்காளர்கள் 6400 பேர் உள்ளனர். இதனால், பாலக்கோடு பேரூராட்சியில் இவர்களுக்கு 5 பிரதிநிதித்துவம் கிடைத்தது. தற்போது வரையறை என்ற பெயரில், இந்த வார்டுகளில் அதிகமான வாக்காளர்களையும், வாக்குச்சாவடிகளையும் மாற்றி உள்ளனர். இதன் மூலம், 5 வார்டு உறுப்பினர்களுக்கு பதில் 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையிலும், தெருக்களின் அடிப்படையிலும், அருகிலுள்ள வாக்குச்சாவடியின் அடிப்படையிலும் இந்த வரையறை அமையவில்லை. மேலும், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை வாக்குச்சாவடியாக தேர்வு செய்துள்ளனர். இதனால், வயதானவர்கள் மற்றும் பெண்கள் வாக்களிக்க மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலக்கோடு பேரூராட்சிகான வார்டுகளை மறுவரையறை செய்து, எங்கள் பிரதிநிதித்துவம் கைவிட்டு போகாமல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். எங்கள் பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலை ஏற்பட்டால், இந்த உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து விடுவோம்.
நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Palakkad ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது