×

சோனியா காந்தி பிறந்தநாள் விழா தர்மபுரி, டிச.10: காரிமங்கலத்தில் சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 74வது பிறந்த நாள் விழாவையொட்டி, காரிமங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில், ராமசாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடந்தது. பின்னர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்பி தீர்த்தராமன், தொழிலதிபர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், வட்டார தலைவர் சரவணன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் சதீஷ்குமார், வட்டார தலைவர்கள் காமராஜ், சுபாஷ், பூபதிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராஜூ பிரகாஷ் நன்றி கூறினார். மேலும், காமராஜர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 10 பேருக்கு கல்வி உதவித்தொகை மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு வழங்கினார்.

Tags : Sonia Gandhi ,Birthday ,Dharmapuri ,
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...