கைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி

புதுச்சேரி, டிச. 10: புதுச்சேரி, சக்தி நகரில் கைது செய்ய முயன்றபோது கோரிமேடு காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடியை, உருளையன்பேட்டை போலீசார் பிடித்து கொடுத்ததோடு அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுவை, சாரம், சக்தி நகரில் வசிப்பவர் ரமேஷ் (42). 2003ல் நடந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய இவரை பிடிவாரண்ட் வழக்கில் கோரிமேடு போலீசார் தேடி வந்தனர். இதனிடையே சக்தி நகரில் உள்ள அவரது வீட்டில் ரமேஷ் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோரிமேடு போலீஸ்காரர் ராஜ், அங்கு சென்று ரமேசை கைது செய்ய முயன்ற நிலையில், காவலரை அசிங்கமாக திட்டியதோடு அவரை கீழே தள்ளிவிட்டு ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertising
Advertising

இத்தகவல் கோரிமேடு காவல் நிலையத்துக்கு வந்த நிலையில், எஸ்ஐ இனியன் உடனே சம்பவம் நடக்கும் பகுதியான உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தற்கிடையே உருளையன்பேட்டை எஸ்ஐ வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் அங்கு வந்து காவலரை மிரட்டிய ரமேசை கைது செய்து கோரிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காவலரை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக ரமேஷ் மீது வழக்குபதிந்த உருளையன்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: