காரைக்காலில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

காரைக்கால், டிச. 10: காரைக்காலில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக இன்னும் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பின. மேலும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில் காரைக்கால் வார சந்தை  திடல், திருநள்ளாறு சாலை, நெடுங்காடு சாலை சந்திப்பு அருகிலும் சாலையோரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதோடு, மழைநீர் மீண்டும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>