×

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை பொதுமக்கள் கட்ட வேண்டும்

விருத்தாசலம், டிச. 10: விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருத்தாசலம் நகரில் சொத்துவரி சீராய்வின்போது குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஐம்பது சதவீதமும், வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு நூறு சதவீதமும், சொத்துவரி உயர்த்தப்பட்டதை தமிழக அரசு அரசாணை மூலம் நிறுத்தி வைத்து உள்ளது. முந்தைய சொத்துவரியே செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை அரசு வழங்கி உள்ளது. மேலும் 13 அரையாண்டுகள் சொத்துவரி உயர்வு செய்யப்பட்ட இனங்களுக்கும் சொத்துவரி ரத்து செய்யப்பட்டு, முந்தைய வரியினையே செலுத்துவதற்கு அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது. எனவே, பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமம் கட்டணம், வீட்டு வரி போன்றவற்றை காலதாமதம் செய்யாமல் விருத்தாசலம் நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் விருத்தாசலம் நகராட்சிக்கு இதுவரை சொத்துவரி நிலுவை தொகையாக ரூ. 5.03 கோடியும், குடிநீர் கட்டண நிலுவை ரூ.1.49 கோடியும், தொழில்வரி நிலுவை கட்டணம் ரூ.73,10,000 மற்றும் பல்வேறு இனங்களின் வரியாக மொத்தம் 4.09 கோடியும் பாக்கி உள்ளது, இதன் காரணமாக விருத்தாசலம் நகராட்சியின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற வளர்ச்சி திட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலையும் நிலவுவதால், பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தி விருத்தாசலம் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : public ,municipality ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...