×

உள்ளாட்சி தேர்தலுக்கு 63 பேர் வேட்பு மனுத்தாக்கல்

திருப்பூர், டிச.10: திருப்பூர் மாவட்டத்தில், ஊரகத்தில், 2,747 பதவிகளுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை துவங்கியது.திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம், உடுமலை, பல்லடம், வெள்ளகோவில், காங்கயம் என ஐந்து நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில், ஐந்து லட்சத்து 37 ஆயிரத்து 729 ஆண்கள்; ஐந்து லட்சத்து, 29 ஆயிரத்து, 984 பெண்கள்; இதர வாக்காளர் 160 பேர் என, 10 லட்சத்து, 67 ஆயிரத்து, 873 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில், 4 லட்சத்து 91 ஆயிரத்து 651 ஆண்கள்; 5 லட்சத்து 4 ஆயிரத்து 50 பெண்கள்; இதர வாக்காளர் 64 பேர் என, 9 லட்சத்து, 95 ஆயிரத்து 765 வாக்காளர் உள்ளனர்.
மாவட்ட அளவில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 380 ஆண்கள்; 10 லட்சத்து 34 ஆயிரத்து 034 பெண்கள்; 224 திருநங்கையர் என, 20 லட்சத்து, 63 ஆயிரத்து, 638 வாக்காளர் உள்ளனர். மொத்த வாக்காளரில், 48 சதவீத வாக்காளருக்கு மட்டுமே, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (9ம் தேதி) வேட்பு மனுதாக்கல் துவங்கியது. வருகிற 16ம் தேதி வரை, வேட்பு மனு தாக்கல் நடைபெறும். ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, ஊராட்சி அலுவலகம்; ஒன்றிய கவுன்சிலர் (வட்டா ஊராட்சி பி.டி.ஓ.,) மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு (கி.ஊ- பி.டி.ஓ.,), ஒன்றிய அலுவலகங்கள்; மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் இருவேறு இடத்திலும், வேட்புமனு தாக்கல் நடை பெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல், 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல், 30ம் தேதியும் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, ஜனவரி மாதம் 2ம் தேதி, வட்டார அளவிலான, 13 ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நடக்கும்.திருப்பூரில், உள்ளாட்சி தேர்தலுக்கு கிராம ஊராட்சிக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதிவிக்கு 4 பேரும் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியதை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்காக 4 பேரும் வேட்புமனுத்தாக்கல் நேற்று செய்தனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. அவிநாசி வட்டத்தில் அதிகபட்சமாக 11 பேரும், ஊத்துக்குளி வட்டத்தில் 9 பேர், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை, பல்லடத்தில் தலா  5 பேர் உட்பட 59 பேர் கிராம ஊராட்சிக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கு  மனுத்தாக்கல் செய்தனர். அவிநாசி வட்டத்தில் 2, பல்லடம் மற்றும் உடுமலையில் தலா  1 என மொத்தம்
4 பேர் ஊராட்சி தலைவர் பதவிக்காக நேற்று சம்பந்தப்பட்டதேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுத்தாக்கல் செய்தனர்.


Tags : government ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...